குமாரகோவில் குமார சுவாமி கோயிலில் கிரிவலம்

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் வேளிமலை  குமார சுவாமி கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திங்கள்கிழமை கிரிவலம் வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் வேளிமலை  குமார சுவாமி கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திங்கள்கிழமை கிரிவலம் வந்தனர்.
பௌர்ணமியை முன்னிட்டு ஜீப்பின் முன்பகுதியில் மாலை அணிவிக்கப்ப்டட குமார சுவாமியின் வண்ண முழு படம் வைத்து பக்தர்கள் குமார கோவில் சன்னதியின் முன்பு திரண்டனர்.  பின்னர் முருகனின் உருவப் படத்துக்கு பூஜை செய்து மலையைச் சுற்றி வலம் வந்தனர்.
முன்னதாக சன்னதியின் முன் பகுதியிலுள்ள கணபதியை வணங்கிவிட்டு ஊர்வலமாக முருகனின் பாடல்களை பாடியவாறு வழியில் அமைந்துள்ள சுடலைமாடன், மலையிலுள்ள கோம்பை சாமி,பத்ரகாளியம்மனை வழிபட்டனர். நிறைவாக தேரடி கோயில் வழியாக தெப்பக்குளத்திலுள்ள கணபதியையும் வணங்கிவிட்டு கோயிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து கோயிலில் குமார சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதத்துடன் முருகனின் வண்ண திரு உருவப் படம் வழங்கப்பட்டது.
முன்னதாக கிரிவலம் குறித்து தோவாளை வேத நிசானந்த சரஸ்வதி ஆன்மிக உரை நிகழ்த்தினார். இந் நிகழ்ச்சிக்கு வேல்முருகன் சேவா சங்கத் தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் குமார சுவாமி,அமைப்பாளர் மணி,சங்க நிர்வாகிகள் ரத்தினமணி,பாபு,மாதவன், முருகேசன்,ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.  
தோட்டியோடு நம்பிமலையில் பௌர்ணமி பூஜை விழா: தோட்டியோடு ஸ்ரீ மௌன குருசுவாமி கோயிலில் பௌர்ணமி பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து பஜனை,சொற்பொழிவு, கோமாதா பூஜை, சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5மணி முதல் சிவப்புராணம் வாசித்தல்,திருவிளக்கு வழிபாடு,சொற்பொழிவு,நாமஜெபம்,தியானம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் பி. சுகதேவன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com