வெள்ளமடத்தில் விவசாயி பைக் எரிப்பு

வெள்ளமடத்தில் விவசாயியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Updated on
1 min read

வெள்ளமடத்தில் விவசாயியின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வெள்ளமடம்,கிறிஸ்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (33). இவருக்குச் சொந்தமான வயல், மாதவலாயம் புளியன்விளை பகுதியிலுள்ள கண்ணன்புதூர் குளம் அருகில் அமைந்துள்ளது.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) இரவு 8 மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அங்குள்ள கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வயலில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு 11 மணி அளவில் திரும்பி வந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஆரல்வாய்மொழி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com