கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் பச்சரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தக்கலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார் புலியூர்குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நாகர்கோவிலிலிருந்து வந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது லாரி ஓட்டுநர் சிறிது தொலைவு தள்ளி நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். போலீஸார் லாரியை சோதனையிட்டபோது சாக்குமூட்டைகளில் 4 டன் ரேஷன் பச்சரிசி இருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரிசியுடன் லாரியை போலீஸார் பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், நாகர்கோவில் உணவு தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

