மத்திய அரசின் திட்டங்களை ஆதிவாசி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில், பேச்சிப்பாறையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பழங்குடியின மக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி, மத்திய அரசின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன் சார்ந்த திட்டங்களை அந்த மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலான பிரசாரங்கள் மற்றும் முகாம்களை பாஜகவினர் நடத்தி வருகின்றனர். இதையொட்டி, பேச்சிப்பாறை சாஸ்தா கோயில் பகுதியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பழங்குடியின மக்களைச் சந்தித்து, அவர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்துப் பேசினார். மேலும், பழங்குடி மக்களுக்கு கழிப்பிடங்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர், அந்த மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
