காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் பஞ்சபூத சாந்தி பரிகார பூஜை மற்றும் உலக நன்மைக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், பசுமை தீர்ப்பாய நீதிபதி டாக்டர் ஜோதிமணி பங்கேற்றார்.
குமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடத்தில் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
ஒக்கி, கஜா, பெய்ட்டி போன்ற புயல்களால் ஏற்பட்ட வரலாறு காணாத பேரழிவுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்கவும், மக்கள் நோய்நொடியின்றி நலமுடன் வாழவேண்டியும், இயற்கையை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் இந்த மந்திராலயத்தில் பஞ்சபூத சாந்தி பரிகார பூஜை மற்றும் உலக நன்மைக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது.
இந்த யாகத்தை மந்திராலய குரு நாம ரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தலைமைவகித்து நடத்தினார். இதில், தென்மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுத் தலைவரும், பசுமை தீர்ப்பாய நீதிபதியுமான டாக்டர் ஜோதிமணி, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் விஜயகுமார், தமிழ்நாடு விளையாட்டு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் செளந்தரராஜன், முன்னாள் அரசு வழக்குரைஞர் பாலஜனாதிபதி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






