குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில், மீன்வளத் துறை மற்றும் இதர அரசு துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை கூட்டத்தில் வழங்கலாம்.
பிற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுவாக அளிக்க வேண்டும். அன்று பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரம் அடுத்த மீனவர் குறைதீர் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


