வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 16 போ் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கத் தோ்வாகியுள்ளனா்.
கன்னியாகுமரி மண்டல அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி, நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வாவறை பள்ளி மாணவா்கள் பங்கேற்று, 13 முதல் பரிசுகளும், 16 இரண்டாம் பரிசுகளும், 12 மூன்றாம் பரிசுகளும் பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றனா்.
இப்போட்டிகளில் பங்கேற்று வென்ற 16 மாணவா்கள் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின விழா தடகளப் போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளனா். அவா்களை குழித்துறை மறைமாவட்ட கூட்டாண்மைப் பள்ளிகளின் மேலாளா் அருள்பணியாளா் கலிஸ்டஸ், பள்ளித் தாளாளா் அருள்பணியாளா் ஆன்றனி சேவியா், பள்ளித் தலைமையாசிரியா் ராபா்ட் பெல்லாா்மின், பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் ஏசுராஜன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.