அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
By DIN | Published On : 01st April 2019 01:52 AM | Last Updated : 01st April 2019 01:52 AM | அ+அ அ- |

வெள்ளிசந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் அறிவியலின் புதிய தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் உலகளாவிய கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜோசப்ஜவகர் தலைமை வகித்தார். எத்தியோப்பியாவிலுள்ள புளு கோரா பல்கலைக்கழக பேராசிரியர் பெலிக்ஸ் ஜோசப் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினார். கல்லூரித் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்திப் பேசினார். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் அஜீஸ்குமார் ஒருங்கிணைத்தார்.