கொல்லங்கோடு பகுதியில் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 01st April 2019 02:10 AM | Last Updated : 01st April 2019 02:10 AM | அ+அ அ- |

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை முன்சிறை மேற்கு வட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
கொல்லங்கோடு அருகேயுள்ள ஊரம்பு சந்திப்பில் நடைபெற்ற பிரசார தொடக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலர் மனோ தங்கராஜ் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அடைக்காகுழி, செங்கவிளை, தளச்சான்விளை, பாத்திமாநகர், பாலவிளை, மஞ்சத்தோப்பு, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி, நடைக்காவு, சூரியகோடு, படந்தாலுமூடு, மடிச்சல், அதங்கோடு, மங்காடு, கிராத்தூர், கலிங்கராஜபுரம், பூத்துறை, இரயுமன்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, நித்திரவிளை, விரிவிளை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.