குலசேகரம் சாரதா கிருஷ்ணா கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவத் தந்தை பிறந்த தினம்
By DIN | Published On : 17th April 2019 08:59 AM | Last Updated : 17th April 2019 08:59 AM | அ+அ அ- |

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை சாமுவேல் ஹனிமனின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் தலைவர் சி.கே. மோகன் குத்துவிளக்கு ஏற்றினார். முதல்வர் என்.வி. சுகதன், சாமுவேல் ஹனிமனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரதாஸ் தலைமை வகித்தார். குளோபல் ஹோமியோபதி பவுண்டேஷன் துணைத் தலைவர் ஜெயேஷ் வி. சாங்வி ஆகியோர் பேசினர். கேரள மாநில ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் ரவி எம். நாயர் உறுதிமொழி வாசித்தார். கல்லூரியின் பேராசிரியர்கள் எம். முருகன், வி. சதீஸ்குமார், மாணவி ஆர். பக்தமீரா, பயிற்சி மருத்துவர் அம்மு ஜே.விஜயன் ஆகியோர் புகழஞ்சலி உரை ஆற்றினர்.
மருந்தியல்துறை துணைத் தலைவர் கே.ஜி. வேணுகோபால் வரவேற்றார். பேராசிரியர் வி. மனோஜ் நாராயணன் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...