தேர்தல் விதிகளை மீறி, மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக, அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன். இவர், மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அலுவலர் ராஜசேகர், ராஜாக்கமங்கலம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் பாலசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.