அல்போன்சா பள்ளியில் அருள்சகோதரிகள் பொன்விழா
By DIN | Published On : 26th April 2019 01:13 AM | Last Updated : 26th April 2019 01:13 AM | அ+அ அ- |

நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில், அருள்சகோதரிகளின் பொன்விழா மற்றும் வெள்ளிவிழா நடைபெற்றது.
நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதல்வர் அருள்சகோதரி பென்னட், அருள்சகோதரி அனிலாஆகியோரின் பொன்விழாவும், அருள்சகோதரிகள் சிசிமரியா, ஆன்சிஆகியோரின் துறவறவாழ்வின் வெள்ளிவிழாவும், தக்கலை மறைமாவட்ட முதன்மை பணியாளர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமையில் நடைபெற்றது. பொன்விழா மற்றும் வெள்ளி விழா கொண்டாடிய அருள்சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றை அல்போன்சா பள்ளியின் முதல்வர் லிசபெத் தொகுத்து வழங்கினார். திருப்பலியைத் தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
புனித அல்போன்சா திருத்தலஅதிபர் தாமஸ் பெளவத்துப்பறம்பில் வரவேற்றார். அல்போன்சா பள்ளி ஆசிரியர்கள் ஐயப்பன், அஜி ஏஞ்சல் ஆகியோர் வாழ்த்து கவிதை வாசித்தனர். ஆசிரியை பிரேம்கலா, செபாஸ்டின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அருள்சகோதரி பென்னட் ஏற்புரையாற்றினார். ஆசிரியர் சுஜித் நன்றி கூறினார்.