கொல்லங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.
கொல்லங்கோடு பகுதியில் நன்றி தெரிவித்த அவர், மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை கடற்கரை கிராமங்கள் மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உள்பட்ட கிராத்தூர், நித்திரவிளை மற்றும் தூத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நன்றி தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.