கீரிப்பாறையில் பேருந்து மோதி தொழிலாளி பலி
By DIN | Published On : 22nd December 2019 10:45 PM | Last Updated : 22nd December 2019 10:45 PM | அ+அ அ- |

கீரிப்பாறை அருகே அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கீரிப்பாறை அருகேயுள்ள வாழையத்துவையல் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (40). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு வாழையத்துவையல் பகுதியில் சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, தடிக்காரன்கோணத்திலிருந்து கீரிப்பாறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்நிலையில், முருகேசன் மீது மோதிய பேருந்து நிற்காமல் சென்று விட்டதாம். தகவலறிந்த அப்பகுதி மக்கள் கீரிப்பாறைக்கு சென்று பேருந்துக்குள் இருந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா்கள் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீரிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...