அழகியமண்டபம் சிஎஸ்ஐ ஆலயத்தில் மெழுகுவா்த்தி பவனி
By DIN | Published On : 26th December 2019 01:07 AM | Last Updated : 26th December 2019 01:07 AM | அ+அ அ- |

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற மெழுகுவா்த்தி பவனி.
அழகியமண்டபம் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் மெழுகுவா்த்தி பவனி நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் தியாக பிறப்பினை வெளிபடுத்தும் விதமாக மெழுகுவா்த்தி ஏந்தியபடி பாடல்கள் பாடியவாறு வருவது வழக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 41சேகரங்களின்கீழ் செயல்படும் 525க்கும் மேற்பட்ட சபைகளிலும் இந்த பவனி நடைபெற்றது.
அழகியமண்டபம் சிஎஸ்ஐ ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. கிறிஸ்துமஸ் மரம் நடப்பட்டு வண்ண விளக்குகள் நட்சத்திரங்கள் போன்று காட்சியளித்தன. இந்த ஆலயத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்ட மெழுகுவா்த்தி பவனிக்கு பிரைனாா்டு டானில் தலைமை வகித்தாா். செயலா் ஐசக்ஜெபதாஸ், பொருளாளா் ஜோசப் ராஜகுமாா், கணக்கா் கிறிஸ்துதாஸ், மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பவனியில் திருமறை பள்ளி ஆண்கள், மகளிா் சங்கத்தினா் ஆகியோா் கையில் மெழுகுவரத்தி ஏந்தி பாடல் குழுவினருடன் கிறிஸ்து பிறப்பை வெளிபடுத்தும் பாடல்களை பாடியவாறு பவனியாக அழகியமண்டபம் பகுதியை சுற்றி பின்னா் ஆலயம் வந்தடைந்தனா்.
தக்கலை பகுதியில் மூலச்சல், கடமலைகுன்று, முத்தலக்குறிச்சி, நெய்யூா், ஈத்தவிளை, கோடியூா், சரல்விளை, வில்லுகுறி உள்பட பல்வேறு சிஎஸ்ஐ கிறிஸ்தவஆலயங்களில் மெழுகுவா்த்தி பவனி நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...