திருவட்டாறு அருகே ஆம்னி பேருந்து சிறை பிடிப்பு
By DIN | Published On : 12th February 2019 04:43 AM | Last Updated : 12th February 2019 04:43 AM | அ+அ அ- |

திருவட்டாறு அருகே வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறை பிடித்தனர்.
குலசேகரத்திலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை மாலை தனியார் ஆம்னி பேருந்து இயக்கப்பட்டது. திருவட்டாறு அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற 2 மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் மோதியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற ஆம்னி பேருந்தை பொதுமக்கள் சந்தை அருகில் சிறை பிடித்தனர். போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவட்டாறு போலீஸார் வந்து பேருந்து ஓட்டுநரான திருவட்டாறு அருகேயுள்ள புளிச்சான்விளையைச் சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தினர். ஓட்டுநர் மது அருந்தி பேருந்தை இயக்கியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஓட்டுநர் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு, சோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாற்று ஓட்டுநர் மூலம் 1 மணி நேரத்திற்குப் பின்னர் அப்பேருந்து இயக்கப்பட்டது.