நாகர்கோவிலில் பிப்ரவரி 13 மின்தடை
By DIN | Published On : 12th February 2019 12:33 AM | Last Updated : 12th February 2019 12:33 AM | அ+அ அ- |

நாகர்கோவில் துணை நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் புதன்கிழமை (பிப்.13) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் சி.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் புதன்கிழமை (பிப்.13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் வல்லன்குமாரன் விளை, தடிக்காரன்கோணம் உபமின்நிலையங்களிலும் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். சாலை, கல்லூரிச் சாலை, நீதிமன்றச்சாலை, கே.பி.சாலை, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.