குமரி மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள்: மார்க்சிஸ்ட் கண்டனம்
By DIN | Published On : 04th January 2019 12:35 AM | Last Updated : 04th January 2019 12:35 AM | அ+அ அ- |

சபரிமலையில் நிகழ்ந்து வரும் சம்பவங்களை முன்வைத்து குமரி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சபரிமலைக்குச் சென்று இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததால், சபரிமலையின் புனிதம் கெட்டு விட்டதாகக் கூறி, குமரி மாவட்டத்தில் குலசேகரம் பகுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும், செம்பொன்காலை, வைராவிளை, கோட்டாறு ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியூவின் கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்படுகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.