குலசேகரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 12:32 AM | Last Updated : 04th January 2019 12:32 AM | அ+அ அ- |

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குலசேகரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலையில் இரண்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்திலும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், குலசேகரம் சந்தை சந்திப்பில் புதன்கிழமை இரவு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிமரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, குலசேகரம் வட்டாரச் செயலர் விஸ்வம்பரன் தலைமை வகித்தார்.
இதில், கட்சி நிர்வாகிகள் ஸ்டானின்தாஸ், அண்ணாதுரை, வல்சகுமார், சகாய ஆன்டனி, ரவி, ஜோஸ் மனோகரன், சந்தரேஷன், சுபாஷ் கென்னடி, மோகனன், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.