நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 04th January 2019 12:33 AM | Last Updated : 04th January 2019 12:33 AM | அ+அ அ- |

மார்த்தாண்டம் அருகே விரிகோட்டில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இப்பகுதி இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு விழா, கலைவிழா ஆகிய முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இதில் மினி மாரத்தான் போட்டி, வடமிழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை ராணுவ வீரர் வினு சுந்தர்சிங் தொடங்கிவைத்தார்.
இளைஞர் இயக்க துணைத் தலைவர் எட்வின் ராஜகுமார், செயலர் சேம்ராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் அனீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் அருண்குமார், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், மேல்புறம் ஒன்றிய திமுக செயலர் சிற்றாறு ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், புலவர் அருளப்பன் எழுதிய சிதைக்கப்படும் பெண்ணுரிமை எனும் நூலை, திண்டுக்கல் ஐ. லியோனி வெளியிட எழுத்தாளர் குமரி ஆதவன் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் புலவர் அருளப்பன் ஏற்புரையாற்றினார்.
தொடர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்துக்கு முன்பா? திருணத்துக்குப் பின்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.