தக்கலையில் பாஜக ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 12:34 AM | Last Updated : 04th January 2019 12:34 AM | அ+அ அ- |

சபரிமலையின் புனிதத்தை கெடுத்து, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, கேரள அரசை கண்டித்து, பாஜக சார்பில் தக்கலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. விஜயராகவன், நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் மீனாதேவ், மாநில மகளிரணி பார்வையாளர் உமாவதி, பாஜக துணைத் தலைவர் ப.ரமேஷ், செயலர்கள் உண்ணிகிருஷ்ணன், சுப்புலட்சுமி, நிர்வாகிகள் ரவீந்திரன், ஸ்ரீகுமார், கலா கோபாலகிருஷ்ணன், கோபகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் நிறைவு பெறும் தருவாயில் கேரள முதல்வரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...