தக்கலையில் மகளிர் மேம்பாட்டு இயக்க ஒன்றிய மாநாடு
By DIN | Published On : 14th June 2019 06:42 AM | Last Updated : 14th June 2019 06:44 AM | அ+அ அ- |

மலர் மகளிர் மேம்பாட்டு இயக்கத்தின் ஒன்றிய மாநாடு தக்கலையில் நடைபெற்றது.
கிராம ஒருங்கிணைப்பாளர் சுஜாஜாஸ்பின் தலைமை வகித்தார். மாநாட்டின் தொடக்கமாக கல்வி தீபம் ஏற்றப்பட்டது. ஒன்றியப் பொறுப்பாளர் அருள்ஜெசி வரவேற்றார். ராஜம் அறிக்கை வாசித்தார். ஒன்றியப் பொறுப்பாளர் விஜயலட்சுமி இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
மாவட்டத் தலைவர் ஜாண்சிலிபாய் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினார். அறிவியல் இயக்க ஒன்றியத் தலைவர் ஜான்இளங்கோ, மலர் மகளிர் மேம்பாட்டு இயக்க மாவட்டச் செயலர் வசந்த் லதா, அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் டோமினிக், மாநிலத் தலைவர் சசிகுமார், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் தக்கலை ஹலிமா ஆகியோர் பேசினர்.மாநாட்டின் இடைஇடையே கிராம ஒருங்கிணைப்பாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தியன் வங்கி நெய்யூர் கிளை மேலாளர் லூயா கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். கவிஞர் அரங்கசாமி நிறைவுரையாற்றினார்.நிகழ்ச்சிகளை அறிவியல் இயக்கத் தலைவர் ஜினிதா தொகுத்து வழங்கினார். கிராம ஒருங்கிணைப்பாளர் சுசீலா நன்றி கூறினார்.