கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் தடம்மாறி இயக்கப்படும் சிற்றுந்துகளைப் பறிமுதல்செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து 32-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் குக்கிராமங்கள் வழியாக நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் பல சிற்றுந்துகள் அனுமதியில்லா தடங்களில் இயக்கப்படுகின்றனவாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.
குறிப்பாக சுண்டவிளை, காக்கவிளை, இருக்கலம்பாடு, முகிலன்விளை, காட்டுக்கடை, ஆலஞ்சி வழியாக குறும்பனைக்கு இயக்கப்படும் சிற்றுந்துகள் அனுமதிபெற்ற வழித்தடங்களில் இயக்கப்படாமல் நேர்வழியாக இயக்கப்படுகின்றனவாம். இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தடம்மாறி இயக்கப்படும் சிற்றுந்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.