முள்ளங்கனாவிளையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குமரி மேற்குமாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ததேயூபிரேம் குமார் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் டைட்டஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், புதுக்கடை தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை(மார்ச் 30) மாலை நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஊழியர் கூட்டத்தில்
திரளானோர் பங்கேற்க வேண்டும். குமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் வெற்றிபெற வீடு,வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.
இதில்,கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க.செயலர் ராஜன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், ம.தி.மு.க.ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் தங்கமோகன், கிள்ளியூர் வட்டாரச் செயலர் சாந்தகுமார் மற்றும் கிள்ளியூர் போரூராட்சி,முள்ளங்கனாவிளை,திப்பரமலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.