கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வினை எழுதிய இப்பள்ளி மாணவர்கள் 61 பேர்களும் தேர்ச்சிப் பெற்றனர். இதில், மாணவி அனுநந்தினி 500 க்கு 462 மதிப்பெண்களும், மாணவி இந்துஜா 452 மதிப்பெண்களும், மாணவி கிப்டாலின் போபி 445 மதிப்பெண்களும் பெற்றனர்.
மேலும், 19 மாணவர்கள் உயர் முதல் வகுப்பிலும், 42 மாணவர்கள் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளியின் செயலர் வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், பள்ளியின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பாராட்டினர்.