வேகத்தடை இல்லாத சுசீந்திரம் புறவழிச்சாலை
By DIN | Published On : 05th May 2019 01:18 AM | Last Updated : 05th May 2019 01:18 AM | அ+அ அ- |

நாகர்கோவில் - சுசீந்திரம் புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நாகர்கோவில்-கன்னியாகுமரி பிரதானச் சாலையில் ஆஸ்ரமத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறவழிச் சாலை சுசீந்திரம் நகருக்குள் செல்லாமல் ஈத்தங்காட்டை சென்றடைகிறது. இதனால், சுசீந்திரம் பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது.
இந்த புறவழிச்சாலை பிரியும் இடத்தில் தடுப்புகள், வேகத்தடையும் இல்லை. இந்த சந்திப்பில் போக்குவரத்து காவலரும் பணியில் இல்லை. இதனால், கன்னியாகுமரியில் இருந்து புறவழிச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பிரதானச் சாலையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வரும் வாகனங்கள், கன்னியாகுமரியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் என இந்த சந்திப்பில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், விபத்துக்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஆகவே, இந்த சந்திப்பில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கவும், வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.