32 ஆண்டுகளுக்கு பிறகு பாலிடெக்னிக் மாணவர்கள் சந்திப்பு
By DIN | Published On : 15th May 2019 06:46 AM | Last Updated : 15th May 2019 06:46 AM | அ+அ அ- |

நாகர்கோவில் சுங்கான்கடை மார்னிங்ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.
நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கிய 1984-87ஆம் கல்வியாண்டில் படித்த முதல் குழு மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பின் கல்லூரியில் சந்தித்துக் கொண்டனர். விழாவுக்கு தனம் தலைமை வகித்தார். கெபின் ஜாய் வரவேற்றார். ஆன்றோ சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை, நினைவு கூர்ந்தனர். மேலும், முன்னாள் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.