அமைச்சர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் ம.நீ.ம. மனு
By DIN | Published On : 19th May 2019 04:29 AM | Last Updated : 19th May 2019 04:29 AM | அ+அ அ- |

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மக்கள் நீதி மய்யத்தினர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அளித்துள்ள மனு: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 13 ஆம் தேதி தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனை மிரட்டும் வகையில், அவர் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். சட்டத்தை மதிக்க வேண்டிய அமைச்சரே, சட்டத்தை மீறும் வகையில் பேசியதால், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.