அருணாச்சலா பள்ளியில் விளையாட்டு அரங்கு திறப்பு
By DIN | Published On : 19th May 2019 04:29 AM | Last Updated : 19th May 2019 04:29 AM | அ+அ அ- |

வெள்ளிசந்தை அருகே காட்டுவிளை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய விளையாட்டு அரங்கு திறக்கப்பட்டது.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஆசோக்குமார் திறந்துவைத்தார். பள்ளி தாளாளர் கிருஷ்ணசுவாமி, துணை தாளாளர் சுனி, முதல்வர் லிஜிமோள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.