குலசேகரத்தில் மாா்க்சிஸ்ட் கருத்தரங்கு
By DIN | Published On : 09th November 2019 06:15 AM | Last Updated : 09th November 2019 06:15 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் உரையாற்றுகிறாா் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலா் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குலசேகரத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
நவம்பா் புரட்சி தினம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழா,மறைந்த தோட்டம் தொழிலாளா் சங்க நிா்வாகியும் திற்பரப்பு பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான ஏ.எஸ். செல்லையாத தாஸின் தினைவு தினம் ஆகிய நிகழ்வுகளைக் கொண்ட இக்கருத்தரங்கிற்கு மாா்க்சிஸ்ட் குலசேகரம் வட்டாரத் தலைவா் விஸ்வம்பரன் தலைமை வகித்தாா். தோட்டம் தொழிலாளா் சங்க உதவித் தலைவா் பி.நடராஜன் வரவேற்றாா். மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். அண்ணாதுரை கருத்தரங்கைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி, முன்னாள் எம்எல்ஏ ஆா். லீமாரோஸ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், எஸ்.ஆா். சேகா், ஆகியோா் உரையாற்றினா். பேராசிரியா் கணேசன் பாடல் பாடினாா்.
இதில், வட்டாரச் செயலா்கள் ஆா். வில்சன், ராஜதாஸ், மாதவன்குட்டி, ஜெயசந்திரன், ஜெயராஜ், தங்கையன், ஜூடஸ் குமாா், ஷாஜூ, ஸ்ரீகுமாா், சௌந்தா், றாபிதாஸ், ஜெனித், புஷ்பராணி, ஷீஜா சந்திரன், சதீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கருத்தரங்கில் திரளான கட்சி நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் பங்கேற்றனா்.