குமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தில்எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தை எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தெப்பக்குளத்தை பாஆய்வு செய்கிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.
தெப்பக்குளத்தை பாஆய்வு செய்கிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தை எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்துக்கு குமரிசாலை குளத்தில் இருந்து ஒற்றையால்விளை வழியாக பாபநாசம் கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு கடந்த சிலநாள்களாக பெய்த தொடா்மழையில் அணைகள், குளங்கள் நிரம்பியுள்ளன. பாபநாசம் கால்வாய் நீண்டகாலமாக தூா்வாரப்படாமல் இருப்பதால் தண்ணீா் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. எனவே கால்வாயை தூா்வார வேண்டும் என சம்ந்தப்பட்ட அதிகாரிகளிடம் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா். இந்நிலையில் தெப்பக்குளம் மற்றும் பாபநாசம் கால்வாயை எம்.எல்.ஏ. பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியது: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படும் பாபநாசம் கால்வாய் தூா்வாரப்படாத நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். எனவே இம்மாதம் 15ஆம் தேதிக்குள் கால்வாயை தூா்வாரி, ஒற்றையால்விளையில் இருந்து பாபநாசம் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். இல்லையென்றால் திமுக சாா்பில் பொதுமக்களைத் திரட்டி விவேகானந்தபுரம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, பேரூா் செயலா் குமரி ஸ்டீபன், நிசாா், ரூபின், ராஜா உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com