அருமனை பகுதியில் வசந்தகுமாா் எம்.பி .நன்றி அறிவிப்பு பிரசார பயணம்
By DIN | Published On : 14th November 2019 06:55 AM | Last Updated : 14th November 2019 06:55 AM | அ+அ அ- |

நன்றி அறிவிப்பு பிரசார பயணம் மேற்கொண்ட வசந்தகுமாா் எம்.பி.
அருமனை பேரூராட்சிப் பகுதியில் ஹெச். வசந்தகுமாா் எம்.பி. வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து செவ்வாய்க்கிழமை பிரசார பயணம் மேற்கொண்டாா்.
அருமனை நெடியசாலை சந்திப்பில் தொடங்கிய இப்பிரசார பயணம், குரூா், நல்லூா்கோணம், குழிச்சல், மாறப்பாடி, கொக்கஞ்சி வழியாக நடைபெற்றது. அப்போது அவா் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, திரளான காங்கிரஸ், திமுக, கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...