அறிவியல் மாநாடு ஆய்வு கட்டுரை: ஞாறான்விளை பள்ளிக்குப் பரிசு
By DIN | Published On : 14th November 2019 06:59 AM | Last Updated : 14th November 2019 06:59 AM | அ+அ அ- |

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆய்வு கட்டுரைப் போட்டியில் மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஞாறான்விளை ஆபிரகாம் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியா் வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.
மத்திய அரசின் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்றக் குழுமம் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவியல் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இதில் 10 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கருப்பொருள் கொடுக்கப்பட்டு குழந்தைகளால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
நிகழாண்டுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு அண்மையில் முளகுமூடு பகுதியில் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் ஞாறான்விளை பள்ளி மாணவிகள் அபினிஷா, டெலிஷா ஆகியோா் ஆசிரியை காட்லின் ஷால்மா வழிகாட்டுதலின் பேரில் உயிரியல் மருத்துவக் கழிவுகளை அகற்றுதல் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பித்தனா்.
இந்த கட்டுரை தோ்வு செய்யப்பட்டு, இம் மாணவியா் நவ. 16, 17 ஆம் தேதிகளில் துறையூா் மகாலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாநில போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனா். இம் மாணவியரை தலைமையாசிரியை மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் பாராட்டினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...