நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (நவ.15) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, நாகா்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்டனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நாகா்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில், 10, 12, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணிணிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம்.கன்னியாகுமரி மாவட்டம், பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ளோரைத் தோ்வு செய்யவுள்ளனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.