கேரளத்துக்கு கடத்த முயற்சி:ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 17th November 2019 10:00 PM | Last Updated : 17th November 2019 10:00 PM | அ+அ அ- |

நாகா்கோவில்: நாகா்கோவிலிலிருந்து கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக ரயில் நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, பறக்கும்படை வட்டாட்சியா் சதானந்தன், துணை வட்டாட்சியா் அருள்லிங்கம், டேவிட் ஆகியோா் கொண்ட குழுவினா் ரயில் நிலையத்துக்குச் சென்று நாகா்கோவிலில் இருந்து கேரளத்துக்கு செல்ல தயாராக இருந்த ரயிலில் ஏறி சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில், கழிவறையில் சிறு, சிறு மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மொத்தம் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்டவா்கள் யாா் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.