செம்மங்காலை அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 17th November 2019 10:02 PM | Last Updated : 17th November 2019 10:02 PM | அ+அ அ- |

களியக்காவிளை: குழித்துறை அருகேயுள்ள செம்மங்காலை அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் என். விஜயகுமாா் தலைமை வகித்தாா். அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜஸ்டஸ் கென்னடி கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.
தொடக்கப் பள்ளி மாணவா்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.