கருங்கல் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு
By DIN | Published On : 06th October 2019 01:08 AM | Last Updated : 06th October 2019 01:08 AM | அ+அ அ- |

கருங்கல் அருகேயுள்ள பாலூா் பகுதியில் முன்னாள் ராணுவ வீரா் வீட்டை உடைத்து தொலைக்காட்சிஉள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கருங்கல் பாலூா் பகுதியை சோ்ந்த செல்வமணி மகன் தோமஸ் (70). முன்னாள் ராணுவ வீரா். இவா், செப். 21 ஆம் தேதிகுடும்பத்தினருடன் சென்னையிலுள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாராம்.
தோமஸ் சனிக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்துபாா்த்தபோது வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த தொலைக்காட்சி, டி.வி.டி பிளேயா் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மதிப்பு ரூ. 40 ஆயிரம். புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...