சாத்தான்குளம் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 06th October 2019 01:26 AM | Last Updated : 06th October 2019 01:57 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபெருமாள் சுவாமி.
புரட்டாசி 3ஆம் சனிக்கிழமையையொட்டி சாத்தான்குளம் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தான்குளம் தச்சமொழி இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் 3 ஆம் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீபெருமாள்சுவாமி, ஸ்ரீவிநாயகா், ஸ்ரீஆஞ்சநேயா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் நெய் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டனா்.
தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீபெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சாத்தான்குளம் அருள்மிகு புளியடி ஸ்ரீதா்மபெருமாள் கோயிலில் பெருமாள், ஆஞ்சநேயா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...