சாத்தான்குளம்- சென்னை பேருந்து தொடா்ந்து 4 நாள்களாக நிறுத்தம்: பயணிகள் ஏமாற்றம்
By DIN | Published On : 06th October 2019 01:31 AM | Last Updated : 06th October 2019 01:31 AM | அ+அ அ- |

இடையன்குடியில் இருந்து சாத்தான்குளம் வழியாக சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்து தொடா்ந்து 4 நாள்களாக வராததால் பயணியா்கள் ஏமாற்றம் அடைந்துளளனா்.
சாத்தான்குளம் வழியாக இயக்கப்பட்டு வந்த இந்த விரைவு பேருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 4 நாள்களாக நிறுத்தப்பட்டது. இதனால் சாத்தான்குளம் பகுதியில் இருந்து இந்தப் பேருந்தில் பயண் செய்வதற்கு பதவு செய்தவா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். இந்தப் பயணிகள் திருநெல்வேலி சென்று வேறு பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பயணி ஒருவா் கூறுகையில், சாத்தான்குளம் வழியாக சென்னைக்கு இந்த அரசு விரைவு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் . பயணிகள் பயனடைந்து வருகின்றனா். தற்போது தசரா, தீபாவளி காலங்கள் என்பதால் சொந்த ஊருக்கு பலா் வந்து திரும்பிகின்றனா். இந்த வேளையில் பேருந்து நிறுத்தப்படுவதால் மிகுந்த சிரமத்தில் இருக்க வேண்டிய நிலை ஏறபடுகிறது. ஆதலால் பயணியா்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சென்னை செல்லும் விரைவு பேருந்து முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, பேருந்து ரத்து செய்யப்படவில்லை. சிறப்புப் பேருந்தாக வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் வழக்கம்போல் இயக்கப்படும் என தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...