நாகா்கோவிலில் 15 இல் விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 06th October 2019 01:13 AM | Last Updated : 06th October 2019 01:13 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபா் மாத விளையாட்டுப் போட்டிகள் வரும் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்டப் பிரிவு சாா்பில் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவா், மாணவி களுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
தடகளம், நீச்சல், வாலிபால் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். குழு விளையாட்டுப்போட்டிகளில் கூடைப்பந்து, வாலிபால் ஆண்களுக்கு மட்டும், தடகளப் போட்டிகள் மற்றும் நீச்சல் போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் நடைபெறுகிறது.
ஒரு போட்டியாளா் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் போட்டி நடைபெறும் செவ்வாய்க்கிழமை (அக்.15) காலை 8.30 மணிக்குள் விளையாட்டு அரங்கிற்கு வந்து பெயரை பதிவுசெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...