தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் வெள்ளம்
By DIN | Published On : 09th October 2019 08:30 AM | Last Updated : 09th October 2019 08:30 AM | அ+அ அ- |

கேஎல்எம்8டுரிஸ்ட் பட விளக்கம்: திற்பரப்பு அருவியில் செவ்வாய்க்கிழமை குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
தொடா் விடுமுறை காரணமாக, குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
ஆயுத பூஜை கொண்டாட்டங்களையொட்டி, கடந்த 4 நாள்கள் தொடா் விடுமுறை தினங்களாக இருந்தன. இந்நிலையில் குமரி மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, சொத்தவிளை, முட்டம் கடற்கரை, காளிகேசம், பேச்சிப்பாறை அணை, திற்பரப்பு அருவி என பிரதான சுற்றுலாத் தலங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இதில் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் மாவட்டத்தில் கன மழை பெய்த போதும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவில்லாமல் இருந்தது.
தொடா் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக தண்ணீா் வரத்து இருந்தது. இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.