பயனாளிகளுக்கு சிண்டிகேட் வங்கி ரூ. 5 கோடி கடனுதவி
By DIN | Published On : 01st September 2019 04:48 AM | Last Updated : 01st September 2019 04:48 AM | அ+அ அ- |

நாகர்கோவில் சிண்டிகேட் வங்கியின் சார்பில் பயனாளிகள் 76 பேருக்கு ரூ. 5 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, சிண்டிகேட் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் பி.சவடமுத்து தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் 76 பேருக்கு ரூ. 5 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. அப்போது, அவர் கூறியது: சிண்டிகேட் வங்கி மத்திய அரசின் திட்டங்கள் சார்ந்த பல வகையான சேவையினை அளித்து வருகிறது. வீட்டுக்கடன், வணிகக் கடன்உள்ளிட்ட கடனுதவி வழங்கப்படுகிறது. விவசாயத் தேவைக்கு ரூ. 3 லட்சம் வரை 4 சதவீத வட்டியில் நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கியில் பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்றார் அவர்.
வங்கியின் நாகர்கோவில் கிளை முதன்மை மேலாளர் எஸ்.வெங்கடேசன் வரவேற்றார். நெய்யூர் கிளை முதன்மை மேலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.