சந்தையடியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
By DIN | Published On : 29th September 2019 12:52 AM | Last Updated : 29th September 2019 12:52 AM | அ+அ அ- |

சந்தையடியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
அகஸ்தீசுவரம் ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இம்முகாம் தொடக்க விழாவுக்கு, பள்ளித் தலைவர் டாக்டர் ஞானசவுந்தரி தலைமை வகித்தார்.
அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஞானசீலன் வரவேற்றார்.
தொடர்ந்து10 நாள்கள் நடைபெறும் இம்முகாமில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மரம்வளர்ப்பும், மழைநீர் சேகரிப்பின் அவசியம், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, சாலைகள் சீரமைப்பு, பிளாஸ்டிக் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பள்ளி முதல்வர் ஐடாஜான்சி நன்றி கூறினார்.