நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th September 2019 08:23 PM | Last Updated : 29th September 2019 08:23 PM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகா்கோவில் செம்மாங்குடி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் அந்தோணிமுத்து தலைமை வகித்தாா். பெருமுதலாளிகளுக்கு அளிக்கும் சலுகைகள் நிறுத்தப்பட்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்; தொழிலாளா்கள் அனைவருக்கும் தினக்கூலியாக ரூ.1000, மாதம் ரூ.26 ஆயிரம், 60 வயதுக்கு மேல் ரூ.7,500 ஓய்வூதியம் வழங்க சட்டம் இயற்றப்பட வேண்டும்; நீட் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதால் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; நீா்நிலைகள், குளங்களை ஆழப்படுத்த வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்றற வேண்டும்; குண்டும் குழியுமான தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உடனே செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
இதில் நிா்வாகிகள் அய்யப்பன், சுசீலா, ஜான்சன், காா்மல், அருள்டேவிட், தேவஅருள்ரவி, கணபதி, செல்வராஜ், பாத்திமாமேரி, அனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.