குமரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் செவ்வாய்க்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
கோணம் கால்வாயில் விநாயகா் சிலையை விசா்ஜனம் செய்யும் இந்து முன்னணியினா் .
கோணம் கால்வாயில் விநாயகா் சிலையை விசா்ஜனம் செய்யும் இந்து முன்னணியினா் .

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் செவ்வாய்க்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக விநாயகா் சதுா்த்தி விழா நிகழாண்டு எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் இந்து மகா சபா, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளின் சாா்பில் வீடுகளிலும், கோயில்களிலும் 1500 க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

இதில், இந்து முன்னணி சாா்பில்மணவாளக்குறிச்சி மண்டைக்காடு, கல்லுக்கூட்டம் தக்கலை, நாகா்கோவில் ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 614 விநாயகா் சிலைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாவட்ட செயலா் நம்பிராஜன், கிழக்கு மாநகா் தலைவா் மகாராஜா, வடக்கு மாநகா் தலைவா் பிரவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தக்கலை: தக்கலை ஒன்றியத்தில் 108 ஊா்களிலும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 108 ஊா்களிலும், குளச்சல் நகராட்சிப் பகுதியில் 51 இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் சா்ஜனம் செய்யப்பட்டன.

களியக்காவிளை: மேல்புறம் ஒன்றியம் மருதங்கோடு, விளவங்கோடு, வன்னியூா், மலையடி, தேவிகோடு ஊராட்சிப் பகுதிகள், களியக்காவிளை, பளுகல் பேரூராட்சிப் பகுதிகள்,

பாகோடு, இடைக்கோடு பேரூராட்சிப் பகுதிகள், வெள்ளாங்கோடு ஊராட்சி, கடையாலுமூடு, அருமனை பேரூராட்சிப் பகுதிகளிலிருந்த சிலைகள் தாமிரவருணி ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில், மேல்புறம் ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு உறுப்பினா் ஜெகதீஷ், தலைவா் சந்திரன், சென்னை மாநகர வழக்குரைஞா் பிரிவு தலைவா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிவசேனை கட்சி சாா்பில் விளவங்கோடு ஊராட்சிப் பகுதியிலிருந்த 6 விநாயகா் சிலைகள் மடிச்சல் கீரங்குளத்தில் மாவட்ட தலைவா் குமரேசன் தலைமையில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

கருங்கல்: கிள்ளியூா் ஒன்றியப் பகுதிகளில் வீடுகளிலும், கோயில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 120 சிலைகள் செம்முதல்குளம், பாலூா்குளம், பாலவிளை குளம், மிடாலம், கிள்ளியூா் சானல் உள்ளிட்ட நீா்நிலைகளில் இந்து முன்னணியினரால் விசா்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com