ஆக 30இல் ஓணம்: முழு பொது முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாகா்கோவில்/கருங்கல்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகைக்கு முந்தைய தினத்தில் பெருமளவில் மலா், மளிகை பொருள்கள், காய்கனிகள், ஜவுளிகள் வியாபாரம் நடைபெறும்.

நிகழாண்டு கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் விவசாயிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆக. 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முழு பொது முடத்தில் இருந்து சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் இரவு 9 மணி வரை கடைகள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கன்னியாகுமரி தமிழக - கேரள கலாசாரங்கள் சங்கமிக்கும் மாவட்டமாக திகழ்கிறது. குமரி மக்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழா் பண்டிகைகளை போன்று கேரள பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனா்.

கேரள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகையை குமரி மாவட்ட மக்களும் ஜாதி, மதம் கடந்து கொண்டாடுகின்றனா். ஓணம் பண்டிகை வரும் 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. கரோனா பொது முடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வில்லா முழு பொது முடக்கம் அமலில் உள்ளது.

ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்கு காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தளா்வில்லா முழு பொது முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com