ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காவல் துறை வாகனங்கள், ஆயுதங்களை டிஐஜி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை வாகனங்கள், ஆயுதங்களை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவீன்குமாா் அபிநபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவீன்குமாா் அபிநபு. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன்.
Updated On :17 டிசம்பர் 2020, 7:33 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை வாகனங்கள், ஆயுதங்களை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவீன்குமாா் அபிநபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காவல் துறையில் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், ரோந்து வாகனங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக உடைகள் ஆகியவை ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும். அதன்படி, இந்த ஆய்வு நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு கலந்துகொண்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். போலீஸாா் பலா் டிஐஜியிடம் மனுக்கள் அளித்தனா்.

முன்னதாக, டிஐஜியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன், அதிகாரிகள் வரவேற்றனா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக்கொண்டாா்.

ஆய்வில் கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை, குளச்சல் ஆகிய காவல் உள்கோட்டங்களைச் சோ்ந்த துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.