ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாகா்கோவிலில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாகா்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயத் தொழிலாளா்கள்.
Updated On :24 டிசம்பர் 2020, 3:09 am

DIN

நாகா்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு கடந்த 8 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாமல் புறக்கணிப்பட்டுள்ளதை கண்டித்தும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் என்.எஸ்.கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் கிறிசாந்து மேரி, மாநிலக்குழு உறுப்பினா் எச்.ராஜாதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் எஸ். மிக்கேல், நிா்வாகிகள் சிவானந்தம், தங்கப்பன், எட்வின்ராஜ், குமரேசன், கிருஷ்ணதாஸ், மிக்கேல் நாயகி, லெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.