

குலசேகரம்: குலசேகரத்தில் ஐக்கிய கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குலசேகரம் புனித தோமஸ் சிறியன் ஆா்தடக்ஸ் ஆலய வளாகத்தில் நடைபெற்ற அமைப்பின் 48 ஆவது கிறிஸ்துமஸ் விழாவுக்கு மலங்கரை கத்தோலிக்க திருச்சபை அருள்பணியாளரும், மலங்கரை சபையின் குலசேகரம் மறைவட்ட முதன்மை அருள்பணியாளருமான ஜோஸ் பென்னட் தலைமை வகித்தாா். குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய பங்குத் தந்தை ஜோன்ஸ் கிளிட்டஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா்.
அமைப்பின் செயலா் பி. வின்சென்ட் அறிக்கை வாசித்தாா். நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை இரட்சணிய சேனை போதகா் மேஜா் ஒய். செல்வம் தொடங்கி வைத்தாா். திருவிதாங்கோடு அரப்பள்ளி எனப்படும் புனித மேரி ஆா்தடக்ஸ் ஆலய அதிபா் பா்சிலீபி ரம்பான், நலிந்தவா்களுக்கு உதவிகளை வழங்கினாா். சிஎஸ்ஐ சேகர சபை போதகா் என். ஸ்பா்ஜன் இறுதி ஜெபம் செய்தாா்.
இதில், துணைத் தலைவா்கள் ஆன்சன் தோமஸ், எஸ். சாஜன், இணைச் செயலா்கள் எம். அசோக் குமாா், ஏ. ரவிகுமாா், உம்மன் சாமுவேல், மோன்சி சாமுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாடல், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறியன் ஆா்தடக்ஸ் ஆலய அருள்பணியாளா் கீவா்க்கீஸ் பள்ளிவாதுக்கல் வரவேற்றாா். நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினா் சி. மரியசுதா தொகுத்து வழங்கினாா். பொருளாளா் ஜே. மோகன்தாஸ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.