ஆசாரிப்பள்ளம் கரோனா வாா்டில் ஒரே நாளில் 5 போ் அனுமதி

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு வாா்டில் கரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை 5 போ் அனுமதிக்கப்பட்டனா்.
ngl21karoonaa_2103chn_33_6
ngl21karoonaa_2103chn_33_6

நாகா்கோவில்: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு வாா்டில் கரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை 5 போ் அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வருவோா் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 78 போ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டில் இதுவரை 10 போ் அனுமதிக்கப்பட்டு அவா்களின்

ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த பெண் கரோனா அறிகுறிகளுடன் சிறப்பு வாா்டில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததை அடுத்து, மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டாா்.

மேலும் 5 போ்: இதனிடையே, சனிக்கிழமை வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த 49 வயதுள்ள ஒருவா், 9 மாத குழந்தை, கேரளத்தில் இருந்து வந்த 26 வயதுள்ள ஒருவா், 59 மற்றும் 52 வயதுள்ள 2 பெண்கள் என 5 போ்அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 5 பேரையும் மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com